மஹா அவதார் பாபாஜி பிறந்தநாள் விழா
மஹா அவதார் பாபாஜி (குரு பூஜை) பிறந்தநாள் விழா வரும் கார்த்திகை மாதம் 24 ம் தேதி வெள்ளிக்கிழமை ( டிசம்பர் 10 ) 2011 ஆண்டு ரோஹிணி நட்சத்திரத்தில் , பாபாஜி ஐயாவின் பிறந்த இடமான கடலூர் அருகில் உள்ள பரங்கிபேட்டை(போர்ட் நோவா) கொண்டாடப்பட உள்ளது.
எனவே தாங்கள் அனைவரும் வந்து இருந்து மகாவதார் பாபாஜி ஐயாவின்
திருவருளை பெற்று கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.
மகாவதார் பாபாஜியின் பிறந்த இடத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்
http://www.puduvaisiththargal.com/2010/11/blog-post_25.ஹ்த்ம்ல்
மகாவதார் பாபாஜியைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்
http://www.puduvaisiththargal.com/search/label/mahavatar%20babaji
Labels: mahavatar babaji
ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் வீடியோ
வீடியோ பார்க்க இங்கே சொடுக்கவும்
http://www.dailymotion.com/video/xjaroq_nijam_shortfilms#from=embediframe
Labels: Appa paithiyam Swamigal
புதுவை சித்தர்கள் வீடியோ
ஸ்ரீ தேங்காய் சுவாமிகள்
(வில்லியனூர் ரயில்வே கேட் அருகில், EB எதிரில்)
ஸ்ரீ வண்ணார பரதேசி சுவாமிகள்
(ஒதியம்பட்டு, வில்லியனூர்-முருங்கப்பாக்கம் சாலை)
ஸ்ரீ அழகப்பர் சுவாமிகள்
(தென்னம்பாக்கம், ஏம்பலம்)
ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள்
(3 வது குறுக்குத்தெரு, பிருந்தாவனம்)
ஸ்ரீ சித்திரமுத்து அடிகளார்
(கம்பளிக்காரகுப்பம்,சைவ கிராமம் )
இங்கே சொடுக்கவும்
Labels: Puduvai siththargal
புதுவை சித்தர்கள்
![]() |
| ஸ்ரீமத் குரு சித்தானந்தர் சுவாமிகள் |
![]() |
| சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் |
![]() |
| கம்பளி ஞானதேசிக சுவாமிகள் |
| அருள்குரு சக்திவேல் பரமானந்தர் சுவாமிகள் |
2.ஸ்ரீமத் குரு சித்தானந்தர் சுவாமிகள் கோவில்
3.அருள்குரு சக்திவேல் பரமானந்தர் சுவாமிகள் கோவில்
4.கம்பளி ஞானதேசிக சுவாமிகள் கோவில்
5.சிவஸ்ரீ மகான் படே சாஹிப் சித்தர் கோவில்
வீடியோவை பார்க்க கீழே சொடுக்கவும்
மகான் சிவஸ்ரீ படே சாஹிப் வரலாறு - 3
மகான் சிவஸ்ரீ படே சாஹிபு பேரும் புகழும்
பெற்று எல்லோருடைய அன்புக்குப்பாத்திரமாகவும் விளங்கினார் . பொறாமை என்பது யாரைவிடும் ? ஒரு ஜமீன்தார் பொறாமையால் ஶ்ரீ படே சாஹிபு மேல் கோபம் கொண்டார் .காரணமில்லாமல் கோபம் ! அந்தச்சித்தரை எப்படியும் கொன்றுவிட வேண்டும்
என்று முடிவு செய்து பல ஆட்களைத்தயாரித்தார் .எல்லோர் கையிலும்
கூர்மையான கத்திகள் . சித்தரைத்தேடிக்கொண்டு அவர்கள் போனார்கள் ஆனால்
அவர்கள் கண்டது என்ன ? ஒரு மரத்தடியில் ஒரு கை கிடந்தது .அருகில்
கால், உடல் என்று துண்டுத்துண்டாககிடந்தது . யார்
இப்படிக்கிடப்பது? நம்ம சித்தர் ஶ்ரீ படேசாஹிபு தான் .
அவரை வெட்டப்போன கூலியாட்கள் ஸ்தம்பித்து நின்றார்கள் . "ஐயோ இப்போ என்ன
செய்வது ? ஜமீன்தாருக்கு என்ன பதில் சொல்வது ?நமக்கு முன்பாகவே வேறு
யாரோ இப்படிக்கண்டந்துண்டமாக வெட்டிப்போட்டுவிட்டார்களே நஎன்ன செய்ய?'
என்று குழம்பியபடி தரையில் ஒழுகியிருந்த இரத்தத்தைத் தங்கள் கத்தியில்
பூசிக்கொண்டார்கள். பின் ஜமீந்தாரிடம் " நாங்கள் வெற்றியுடன் காரியத்தை
முடித்துவிட்டோம் ' என்று கத்தியில் இருக்கும் இரத்தத்தைக்காட்டினார்கள்
.ஜமீன்தாரும் அங்குப்போக
" நானா வெட்டப்பட்டிருக்கிறேன் நானா துண்டு துண்டாகவா இருக்கிறேன்
?யார்சொன்னது ?என்று கேட்டபடியே ஶ்ரீ படே சாஹிபு எழுந்து நின்றார் .
அந்தச்சூழ்நிலை எப்படியிருக்கும் ? யோசித்துப்பாருங்கள் .
"தடால் "என்று அவர் காலடியில் விழுந்தார் மனதளவில் ஆடிப்போன ஜமீன்தார்
சித்த வைத்தியம்
ஆரோக்கியம்
குளுகோஸ் உடலுக்கு நேரடியாக கிடைக்க : தினசரி 2 பேரீச்சம்பழம் மற்றும் பால் சாப்பிடவும்.
ஆயுள் பெருக : இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.
Labels: சித்த வைத்தியம்
மகான் படே சாஹிப் வரலாறு -2 ( பாம்புக்கு மோட்சம் அளித்தல்)
ஒருநாள் வனத்தாம் பாளையம் சென்று பண்ண குப்பத்திற்கு மகான் படே சாஹிப் திரும்பி வந்துகொண்டிருந்தார். ஒரு கருநாகம் மகானின் பாதத்தை தீண்டிச் சென்றது. அதைக்கண்ட மக்கள் நடுநடுங்கினார்கள். என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று புலம்பினார்கள். ஆனால் மகான் எவ்வித உணர்ச்சியும் இன்றி போய்க்கொண்டே இருந்தார். மக்கள் அவர் கூடவே ஓடி விஷ முறிவு மருந்து சாப்பிட வற்புறுத்தினார்கள். இதை கேட்ட மகான் புன்முறுவல் பூத்தார்.
மக்கள் ஆச்சரியத்துடன் அவர் கூடவே பண்ணைக்குப்பம் போய் சேர்ந்தார்கள். இரவு முழுவதும் மஹானை கவனித்துக் கொண்டு உண்ணாமல், உறங்காமல் கவலையோடு இருந்தார்கள். இரவு முழுவதும் மகானும் உறங்கவில்லை. மறுநாள் காலை அங்கு உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்றார். ஆனை முகத்தானை வணங்கினார். அவர் உடல் முழுவதும் நீலம் பரவி இருந்தது.
பகவானிடத்தில், சர்வேஸ்வரனின் பெரிய பிள்ளையான ஞானசொருபமான உள்ளாழ்ந்த பக்தியை செலுத்தினார். இமைகள் மூடி கொண்டன. நிஷ்டை நிலைக்கிறது. ஒரே ஏகாந்த நிலை தொடர்கிறது. குணங்களற்ற நிலை, காலங்களற்ற நிலை வந்து எய்துகிறது. பேசுவதற்கு ஏதும் இல்லை, சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை, ஏங்குவதற்கும் ஏதும் இல்லை. இத்தைகைய விவரிக்க தெரியாத தெய்வீக சக்திவாய்ந்த நிலையில் மகான் படே சாஹிப் அமர்ந்திருந்தார்.
அப்போது அவரை தீண்டிய பாம்பு (கருநாகம்) ஆனந்தமாக கோவிலுக்குள் நுழைந்தது. பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்தார்கள். மகான் ஆனந்தத்தில் நிலைத்திருந்தார். அந்த கருநாகம் யாரையும் ஒன்றும் செய்யவில்லை. அவரை மூன்று முறை வலம் வந்தது. அது தீண்டி இடத்தில வாய் வைத்து விஷத்தை உறிஞ்சிய உடன் விநாயகப் பெருமானை வலம் வந்தது. சுற்றி இருந்தவர்களை திரும்பி திரும்பி நோக்கியது. மகானின் சிரசின் மேல் படம் எடுத்தது. பின் இறங்கி மூன்று முறை தன் தலையால் அவரின் பாதத்தில் வணங்கியது. அவரது முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தது. ஒருமணி நேரம் கழித்து மகானின் கண்கள் மெல்லத் திறந்தது. நிஷ்டை கலைந்து, தன்னை பார்த்துக் கொண்டு இருக்கும் கருநாகத்தை பார்த்தார். தன் தலையை சுருட்டி தலை குனிந்து வணங்கியது. அவர் பாதத்தில் ஆபடியே தன் உயிரை விட்டது.
அந்த நாகத்திற்கு மகான் தனது இரண்டு கைகளாலும் ஆசீர்வாதம் செய்து மோட்சம் அளித்தார். அந்த பூஉடலுக்கு தன் கைகளாலே இறுதி சடங்குகளை செய்து முடித்தார். மக்கள் இந்த நிகழ்ச்சியை பிரமிப்புடன் கண்டனர். கொடிய விஷத்தை தந்த நாகத்திற்கு கூட அவரால் மோட்சம் அளிக்க முடிந்தது.
மேலும் அந்த ஊர் மக்களுக்கு விஷம் தீண்டாதபடியும், தீண்டினாலும் அது அவர்கள் உடலில் ஏறாத படியும் விஷ ஜந்துக்களுக்கு ஆணை இட்டு ஆசிர்வதித்தார் .
மக்கள் மனதில் அந்த ஆத்மஞானி "தெய்வம்" என்ற நிலையில் வைத்து போற்றபடுகிறார்.
Labels: Bade Saheb
ஒரு யோகியின் சுய சரிதம்
மஹா அவதார் பாபாஜியைப் பற்றியும் , அவரது சீடர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு இந்த புத்தகம் ஒரு பொற்களஞ்சியம். இந்த புத்தகத்தை எழுதியவர் பரமஹம்ச யோகானந்தர். இவர் பாபாஜியின் ஒரு சீடர் ஆவார்.
மஹா அவதார் பாபாஜியின் மேன்மைகளும், லீலைகளும், அவருடைய கருணை மிகுந்த உள்ளமும்(காருண்ய ரூபா - கருணை மிகுந்தவர் ) இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
"Autobiography of Yogi " என்ற புத்தகத்தின் தமிழாக்கமே "ஒரு யோகியின் சுய சரிதம் " என்று வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனாலும் படிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம்.
நான் படித்த அனுபவத்தில் கூறுகிறேன், அவருடைய எழுத்துக்களில் கரைந்து போனேன். இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டால் , நேரம் போவது தெரியாது. என்னை சுற்றி நடப்பது என்னவென்று என்னால் அறிய இயலாது. எந்த நிகழ்ச்சியை யோகானந்தர் விவரிக்கிறாரோ அந்த இடத்திலேயே சென்று பார்ப்பது போல ஒரு அனுபவம்.
காரணம் என் குருவை(பாபாஜியை) தேடும் ஏக்கத்தினால். ஒரு முறையாவது என் எதிரினில் தோன்ற மாட்டாரா என்ற ஒரு அவா. உன்னுடன் தான் நான் இருக்கிறேன் என்று பாபாஜி என்வாழ்வில் நடத்தும் லீலைகள். பாபாஜியை நினைத்த மாத்திரத்திலேயே, அவரிடம் இருந்து எனக்கு வரும் பதில்கள் .
யார் அறிவார் பாபாஜியின் லீலைகளை...
உணர்ந்து பாருங்கள் உங்களுக்கு உண்மை புரியும்.அவரின் சக்தியை தங்களால் தெரிந்து கொள்ள இயலும்.
"இது மாயை நிறைந்த உலகம்.
ஆசையே மாயை, மாயையே ஆசை (வாசனா ஆசைகள் )"
~மஹா அவதார் பாபாஜி
Labels: mahavatar babaji
சிவஸ்ரீ மகான் படே சாஹிப் வரலாறு -1 ( மௌனம் )
மகான் படே சாஹிப் சின்னபாபு சமுத்திரம் என்ற சிற்றூரில் ஆத்ம சாதனை செய்து இறைவனோடு கலந்துள்ளார். இவ்வூரில் மகானின் சமாதி மிக அமைதியான சூழ்நிலையில் அமைந்து உள்ளது.
மகான் படே சாஹிப் அவ்வளவாக யாரிடம் பேசுவதில்லை. மௌனத்தில் ஆழ்ந்தார். மகா மௌனத்தை அடைந்து விட்ட பிறகு படே சாஹிப்புக்கு எண்ணங்கள் அற்று விட்டன. மனம் மறைந்து விட்டது. இவ்வுலக பற்று, உலக இயக்கம் யாவற்றிலிருந்தும் விலகி முழு ஆத்மீக வாழ்வுக்கு மாறிவிட்டது. உலக வாழ்க்கையில் இருந்து ஆத்மீக வாழ்வுக்கு மாறுவது மிக கடினமானது.
மகான் புதுவை மாநிலத்தைச் சார்ந்த திருக்கனூரில் சில ஆண்டுகள் தங்கி உள்ளார். திருக்கனூருக்கும் சின்னபாபு சமுத்திரதிற்கும் இடையிடையே சென்று வருவது உண்டு. இவருக்கு இரவு, பகல் கிடையாது. அதற்காக அவர் மூன்று சுதந்திரத்தை விட்டார்.
1 .தேக சுதந்திரத்தை விட்டார்
2 .போக சுதந்திரத்தை நீக்கினார்.
3.ஜீவ சுதந்திரத்தை விலக்கினார்.
ஆண்டுகள் ஓடின. ஆத்மசக்தி பெருகின. சித்துக்கள் கைவரப் பெற்றார். கருணையே வடிவமானர். மக்கள் மகானுக்கு மரியாதை செலுத்தினார்கள். தாங்க முடியாத நோய் உள்ளவர்கள் தங்கள் குறையை மகானிடம் கூறுவார்கள்.
சற்று நேரம் கழித்து தலை அசைப்பார். நோய் குணமாகி விடும். சிலரை அங்குள்ள ஒரு மரத்தை சுற்றும்படி ஜாடை காட்டுவார். அதன் படி சுற்றும் மக்கள் அனைவருக்கும் நோய் நீங்கி , மிகுந்த மகிழ்ச்சி கொண்டவராக மாறிவிடுவார்கள்.
மேலும்....
சிவஸ்ரீ மகான் படே சாஹிப் சித்தர் பீடத்தைப் பார்க்க
http://www.puduvaisiththargal.com/2010/11/blog-post_24.html
சிவஸ்ரீ மகான் படே சாஹிப் படங்களை பார்க்க
http://www.puduvaisiththargal.com/2010/12/sri-bade-saheb.html
மகான் படே சாஹிப் அவ்வளவாக யாரிடம் பேசுவதில்லை. மௌனத்தில் ஆழ்ந்தார். மகா மௌனத்தை அடைந்து விட்ட பிறகு படே சாஹிப்புக்கு எண்ணங்கள் அற்று விட்டன. மனம் மறைந்து விட்டது. இவ்வுலக பற்று, உலக இயக்கம் யாவற்றிலிருந்தும் விலகி முழு ஆத்மீக வாழ்வுக்கு மாறிவிட்டது. உலக வாழ்க்கையில் இருந்து ஆத்மீக வாழ்வுக்கு மாறுவது மிக கடினமானது.
மகான் புதுவை மாநிலத்தைச் சார்ந்த திருக்கனூரில் சில ஆண்டுகள் தங்கி உள்ளார். திருக்கனூருக்கும் சின்னபாபு சமுத்திரதிற்கும் இடையிடையே சென்று வருவது உண்டு. இவருக்கு இரவு, பகல் கிடையாது. அதற்காக அவர் மூன்று சுதந்திரத்தை விட்டார்.
1 .தேக சுதந்திரத்தை விட்டார்
2 .போக சுதந்திரத்தை நீக்கினார்.
3.ஜீவ சுதந்திரத்தை விலக்கினார்.
ஆண்டுகள் ஓடின. ஆத்மசக்தி பெருகின. சித்துக்கள் கைவரப் பெற்றார். கருணையே வடிவமானர். மக்கள் மகானுக்கு மரியாதை செலுத்தினார்கள். தாங்க முடியாத நோய் உள்ளவர்கள் தங்கள் குறையை மகானிடம் கூறுவார்கள்.
சற்று நேரம் கழித்து தலை அசைப்பார். நோய் குணமாகி விடும். சிலரை அங்குள்ள ஒரு மரத்தை சுற்றும்படி ஜாடை காட்டுவார். அதன் படி சுற்றும் மக்கள் அனைவருக்கும் நோய் நீங்கி , மிகுந்த மகிழ்ச்சி கொண்டவராக மாறிவிடுவார்கள்.
மேலும்....
சிவஸ்ரீ மகான் படே சாஹிப் சித்தர் பீடத்தைப் பார்க்க
http://www.puduvaisiththargal.com/2010/11/blog-post_24.html
சிவஸ்ரீ மகான் படே சாஹிப் படங்களை பார்க்க
http://www.puduvaisiththargal.com/2010/12/sri-bade-saheb.html
Labels: Bade Saheb




















