ஒரு
கைக்குட்டைக்குக்கூட சில
அதிர்வுகள் உண்டு.
அந்த
விதத்தில் நட்சத்திரங்கள், கோளங்கள், கிரகங்கள் இவற்றுக்கும் அதிர்வுகள் உண்டு.
இதன்
தாக்கம் பூமி
மீதும்
கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக, உயிரற்ற அந்த
ஜடப்பொருள்கள் உயிருள்ள நம்
வாழ்க்கையைத் தீர்மானிக்க விடுவதா?
உங்களுக்குத் தெளிவும், ஸ்திரத் தன்மையும் இல்லையென்றாலும், எது
வேண்டுமானாலும் உங்களை
ஆட்டி
வைக்க
முடியும். உங்களைச் சுற்றியுள்ள உயிரற்ற ஜடப்பொருள்கள் தங்களைப் போல்
உங்களை
ஆக்குவதற்கு முயற்சி செய்தால், அதற்குப் பணிந்து போவீர்களா? அல்லது
புத்திசாலித்தனத்துடன் உங்கள்
வாழ்க்கையை உங்கள்
விருப்பப்படி அமைத்துக் கொள்வீர்களா? நீங்கள் உறுதியாக இருந்தால் உங்களை
எந்தக்
கிரகம்
என்ன
செய்துவிட முடியும்?
எந்தச்
சூழ்நிலையையும் உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள
தெரிந்திருந்தால், நீங்கள் பயப்படமாட்டீர்கள். கவனமோ,
விழிப்புணர்வோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு வேண்டுமானால், கிரகங்கள் தீர்மானித்தபடி வாழ்க்கை நடக்கலாம். கொஞ்சம் விழிப்புணர்வோடு வாழ்க்கையை அணுகுபவர்கள் தங்கள்
வாழ்க்கையின் திசையைத் தாங்களேதான் தீர்மானித்துக் கொள்ள
விரும்புவார்கள். ஆரூடம்
என்பது
வானிலை
அறிக்கை போன்றது. எல்லா
சமயங்களிலும் கணிப்பு சரியாக
இருப்பதில்லை. மழை
பெய்யும் என்று
அது
சொல்லட்டும். ஆனால்
நான்
நனைவேன் என்று
எப்படிச் சொல்ல
முடியும்? நனைவதா
வேண்டாமா என்பது
என்
கையில்தானே இருக்கிறது?
0 comments:
Post a Comment