சென்னை தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்று வடசென்னையின் ஒரு பகுதியாகவே கருதப்படும் திருவொற்றியூர் கடற்கரையில் சமாதி கொண்ட பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்துக்காரர்தான். அவர் கையில் இருந்த பேய்க் கரும்பின் கசப்பு திருவொற்றியூர் என்கிற இன்றைய சென்னையின் தலைமாட்டுக்கு அவர் வந்த பிறகுதான் இனித்தது.
அவ்விடத்தையே தமது உடல் ரீதியான நடமாட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகப் புரிந்து கொண்டு அதையே தனது அடக்கத் தலமாகத் தேர்ந்து கொண்டுவிட்டார், பட்டினத்தார்.
இவருடைய வரலாறு சற்று நீண்டது.
இளமை முதலே இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படுகின்றது. குபேரன் தான் இப்பூவுலகில் பட்டினத்தாராக அவதரித்தார் என்று திருவெண்காட்டுப் புராணம் கூறும். மண்ணுலகில் உள்ள பல சிவ ஸ்தலங்களை தரிசிக்க குபேரன் விரும்பினார். அதனால் காவேரி பூம்பட்டினத்தில், பிறந்தார். பெற்றோர்கள் சிவநேசன்-ஞானகலாம்பை ஆவர். இவர்களின் தவப்பயனாய்ப் பிறந்தவரே பட்டினத்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் திருவெண்காடர். திருவெங்காடு சென்று வேண்டி பெற்ற பிள்ளையாதலின் திருவெங்காடர் என பெயரிட்டனர். நாளை இந்த பிள்ளை பல கோடி சிவன் அடியார்கள் பேர் சொல்லும் ஒரு சித்தராக வர போகிறது என்பதை அன்று அவர்கள் அறியவில்லை.

0 comments:
Post a Comment