1961ஆம் ஆண்டு பில்வ வருடம், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று அஸ்த நட்சத்திரம் சோமவாரம் கூடிய நன்னாளில் எல்லோரையும் அழைத்து, தான் சமாதி அடையப் போவதை கூறி, அப்படியே ஜீவசமாதி அடைந்திருக்கிறார். அதற்கு முன், தான் ஜீவசமாதி அடையப்போகும் இடம் எந்த செட்டியாருக்கு சொந்தமானது; எந்த சர்வே எண்ணில்; ஆவணத்தில் எத்தனையாவது பக்கத்தில் எந்த குறியீடு போட்டிருக்கும் என்ற விவரங்களை எல்லாம் சொல்லி, அன்பளிப்பாக நிலதானம் வேண்டாம் என மறுத்து, தன் பக்தன் ஒருவன் பெயருக்கு நூறு ரூபாய்க்கு கிரயம் செய்துதரச் சொல்லி, பின்னரே இவ்விடத்தில் ஜீவ சமாதி அடைந்துள்ளார் மௌன குரு சுவாமிகள்.
ஜீவ சமாதியின் மீது விநாயகர் சிலை முதலில் இருந்தது. காஞ்சிப் பெரியவரின் ஆலோசனைப்படியே மௌனகுரு சுவாமியின் திருவுருவ சிலையையும் பிரதிஷ்டை செய்தார்கள்.
இந்த சுவாமிகளின் ஆலயம் இன்று அமைந்து இருப்பது அப்பர் சமாதி கோவில் தெருவில். இது குடிசை பகுதி. இந்த சுவாமிகளின் அதிஸ்டானம் எங்கு இருக்கிறது என்று கேட்டால் திருவொற்றியூர்ரில் பலருக்கு தெரிவதில்லை. நீங்கள் அந்த கோவிலுக்கு வெளியில் கிழக்கு கோபுர வாயிலில் அப்பர் சுவாமிகள் கோவில் தெரு எப்படி போவது என்று கேளுங்கள். அந்த கோபுர வாயிலுக்கு எதிராக ஒரே ரோட். அது முடிந்ததும் திருவொற்றியூர் பீச் main ரோட் வரும். அதை க்ராஸ் பண்ணி நேராக போனால் அப்பர் சாமி கோவில் தெரு. அதில் இடது பக்கம் ஒரு பத்து குடிசைகள், வலது பக்கம் பத்து குடிசைகள் அதற்கு நடுவே சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. அந்த தெருவில் இவர் சமாதியை அனைவருக்கும் தெரிகிறது என்பதில் அடியேனுக்கு மகிழ்ச்சி. காரணம் அடியேன் பாடகச்சேரி சுவாமிகள், அப்புடு ஸ்வாமிகளை தரிசிக்க சென்ற பொழுது பக்கத்து காம்பௌன்ட்டில் இருப்பவரே அங்கு சக்தி வாய்ந்த ஞானியர் அதிஸ்டானங்கள் இருப்பதை அறியாதவராய் இருந்தார். இந்த சுவாமிகளின் அதிஸ்டானம் இருக்கும் அதே தெருவில் சடை சுவாமிகள் என்கிற சக்தி வாய்ந்த ஒரு சித்தரின் அதிஸ்டானம் இருக்கிறது. அந்த சடை சித்தரின் ஆலயம் மௌன குரு சுவாமிகளின் ஆசிரமத்திற்கு பூஜை செய்பவரின் இல்லத்தினுள்ளேயே இருக்கிறது.
வேதன் செய்த சிருஷ்டிகள்போல் வேறு செய்குவோம்
வேதனையு மெங்கள் கீழே மேவச் செய்குவோம்
நாதனுடன் நாங்களும் சமமாக வாழ்குவோம்
நாங்கள் செய்கை யாம் இது வென் றாடு பாம்பே...
என்று பாம்பாட்டி சித்தர் பாடியது போல, நாதனுடன் (இறைவனுடன்) சமமாக நாளும் (இன்றும்கூட) வாழ்ந்துக் கொண்டிருக்கும் கண்ணப்ப சுவாமிகளின் ஜீவசமாதியில், நினைத்த காரியங்கள் வெற்றியோடு முடிய, அவரின் காந்த அதிர்வுகளை கைப்பற்ற இன்றே புறப்படுங்கள்...

0 comments:
Post a Comment