ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை ஆசிரமம்
(புதுவை மணக்குள விநாயகர் கோவிலின் அருகில் அமைந்துள்ளது)
ஸ்ரீ அரவிந்தர் சுவாமிகளின் பீடம் டிலாமரைன் மற்றும் மணக்குள விநாயகர் கோவில் வீதி சந்திப்பில் அமைந்துள்ளது. இவர் சிறந்த உயர் கல்வி கற்றவர். பேராசிரியராய் விளங்கியவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்றவர். பின் அமைதிக்காக புதுச்சேரியை அடைந்து பாரதியாரை சந்தித்து மிகுந்த மரியாதைக்குரிய நண்பராக வாழ்ந்தவர்.
அமைதி இல்லாத சூழ்நிலையில் புதுச்சேரிக்கு வந்த அரவிந்தருக்கு புனித பூமி புத்துணர்வு ஊட்டியது. இங்கு இவர் கீதைகளையும், பல இதிகாசங்களையும், வேதங்கள் பலவற்றை அமைதியாக படித்து பின்பு பாரதியாருடன் தினசரி மணிக்கணக்கில் வேதங்களை பற்றி கருத்து பரிமாறிக்கொள்வார்.
இவர் சூர்யா என்ற ஆன்மீக இதழை பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழியில் தொடங்கினார். பின்பு உலக பந்தத்தில் இருந்தும், வெளிஉலக தொடர்புகளிலிருந்தும் , முற்றிலும் தம்மை விடுவித்துக் கொண்டு பல ஆண்டுகள் தவம் இருந்தார். 4 .12 .1950 ஆண்டு தெய்வீக நிலையை அடைந்தார்.
ஸ்ரீ அரவிந்தர் திரு உருவம்.
ஸ்ரீ அன்னை திரு உருவம்.
இயற்பெயர் : மீரா.
அன்னையின் சிறியவயது புகைப்படம்.
ஆசிரமத்தில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை அவர்களது சமாதியின் தோற்றம்






0 comments:
Post a Comment