ஸ்ரீ அழகப்பர் சுவாமிகளின் சித்தர் பீடம் புதுச்சேரியில் இருந்து நல்லாத்தூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் நல்லாத்தூர் - தூக்கினாம்பாக்கம் இடையில் ஒரு ஏரிக்கரையில் தென்னம்பாக்கம் என்ற கிராமத்தில் உள்ளது.
இங்கு அழகு முத்தையனார் என்னும் இறைவன் பொற்கலை, பூரணியோடு தம் பரிவாரபோர் வீரர்களோடும் காட்சி அளிக்கிறார். இங்கு சிறப்பு, பிள்ளை இல்லாதவர்கள் பிள்ளைபேறு அடைவதற்காக, அதுவும் தமக்கு எப்படிப்பட்ட பிள்ளை வேண்டும் என்பதனை கற்பனை செய்து அவ்வண்ணமே ஒரு சிலையை செய்து காணிக்கையாக அளிப்பர்.
இந்த சித்தர் தினமும் கிணற்றில் தியானம் செய்யும் பழக்கம் உடையவர். ஒருநாள் நீரினுள் ஜீவ சமாதியாகி விட்டார். குருபூஜை ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் திங்கள் கிழமை நடைபெறும். இங்கு அன்னதானம் மிகவும் விசேஷம்.
சித்தர் பீடத்தின் முகப்பு தோற்றம்.




0 comments:
Post a Comment