(மஹா அவதார் பாபாஜியின் சீடர்)
பிள்ளை பருவம் :
இவர் ஜனவரி மாதம்,5 -ம் தேதி,1893 -ம் ஆண்டு இந்தியாவில், உத்ரப்ரதேச மாநிலத்தில், கோரக்பூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் முகுந்தா லால் கோஷ்.பிள்ளை பருவம் :
சிறிய வயதில் இருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர். இந்திய ஞானிகளையும்,முனிவர்களையும் பார்த்து ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டார்.
1910 -ல், 17 வயதுஆக இருக்கும் போது சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரியை கண்டார். பின்னர் அவரது சீடராக மாறினார். அவரை முதல் தடவை பார்த்த போதே, ஜென்ம, ஜென்ம தொடர்புகள் கொண்டதாக உணர்ந்தார்.
அதன் பிறகு சுவாமி யுக்தேஸ்வர், "உன்னை என்னிடம் கொண்டுவந்தது மஹா அவதார் பாபாஜி தான். ஒரு முக்கியமான காரணத்திற்கு தான் என்னிடம் உன்னை வரவைத்தார்."
இளமை பருவம் :
சிரம்பூரில் உள்ள கல்கத்தா பல்கலைகழகத்தில் இளங்கலை படித்து முடித்தார். இதனால் அங்கு அமைந்துள்ள யுக்தேஸ்வர் ஆசிரமத்தில் செலவிட அதிக நேரம் கிடைத்தது.
1915 -ல் காவி நிற ஆடை அணிந்தார். எனவே மக்களால் இவர் சுவாமி யோகானந்தா என்று அழைக்கப்பட்டார்.
1917-ல், டிஹிகா என்னும் இடத்தில் ஆண்களுக்கான ஒரு பள்ளியை அமைத்தார். இங்கு பாடங்களோடு சேர்த்து, யோக முறைகளும் கற்று தரப்பட்டது. ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த பள்ளி ராஞ்சிக்கு மாற்றப்பட்டது. காலப்போக்கில் இந்த பள்ளி யோக சங்கமாக மாறியது.
1920 -ல் அமெரிக்காவிற்கு இந்திய சமய தூதராக அனுப்பபட்டார். உலகம் முழுவதும் சொற்பொழிவுகளை நடத்தினார். 1936 -ல் யுக்தேஸ்வரால் "பரமஹம்ச" பட்டம் சூட்டப்பட்டு "பரமஹம்ச யோகானந்தர்" என்று அழைக்கப்பட்டார். இந்தியாவிலும் ஆன்மீக சொற்பொழிவுகளையும் மேற்கொண்டார்.
இக்காலத்தில்தான் மஹா அவதார் பாபாஜியைப் பற்றி கூறும் நூலாகிய "ஒரு யோகியின் சுயசரிதை" ஆங்கிலத்தில் எழுதினார். மகா அவதார் பாபாஜி தன்னை உலகம் அறிய செய்ய யோகானந்தரை மற்றொரு கருவியாக பயன்படுத்தினார். க்ரியா யோக நிலைகளை எடுத்து உரைக்கும் நூலாக அது விளங்கியது.
ஒரு யோகியின் சுயசரிதை புத்தகத்தில்,தனது குருவான மஹா அவதார் பாபாஜியை நேரில் கண்டதாக கூறியுள்ளார்.
கடைசி நாட்கள் :
தன்னுடைய கடைசி நாட்களை அமெரிக்காவில் கழித்தார்.இவரின் கடைசி சொற்பொழிவு அமெரிக்காவில் உள்ள திரு.சென்(இந்திய தூதர்) இல்லத்தில் நடைப் பெற்றது. 1952 -ம் வருடம், மார்ச் 7 -ம் தேதி திரு.சென் வீட்டிலேயே இறைவன்அடி சேர்ந்தார். அவரது உடல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சவக்கிடங்கில், இந்திய சீடர்கள் வரும் வரை வைக்கப்பட்டது.
உயிர் பிரிந்து 20 நாட்கள் ஆகியும் அவரது உடலில் இருந்து எந்தவித துர்நாற்றமும் வீசவில்லை,தோலும் சுருங்கவில்லை. உடல் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதைக்கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பத்திரிகைகள் மிக ஆச்சரிய, சிறப்பு செய்தியாக வெளிஇட்டன.

0 comments:
Post a Comment