ஸ்ரீ சுப்பரமணிய அரபில சச்சிதானந்த சுவாமிகளின் பீடம் புதுச்சேரியில் உள்ள எல்லைபிள்ளைச் சாவடியில் உள்ளது. இவர் சிருங்கேரி சிவகங்கா 16 -வது மடபீடாதிபதியாக பட்டம் சூட்ட பட்டவர். 1910 -ம் ஆண்டு சிவகங்கையில் ஒரு சாரதாம்பாள் கோவிலைக்கட்டி சாரதாம்பாள் சிலையை பிரதிஷ்டை செய்தவர். பாரதம் முழுவதும் பாத யாத்திரை செய்தவர்.
இவருடைய ஆசை தன ஜீவ உடல் சித்தர்கள் வாழும் புதுச்சேரியில்தான் பிரிய வேண்டும் என்பதே. இதனால் இவர் எல்லோரையும் விட்டு புதுச்சேரிக்கு வந்து ஒரு மடத்தை அமைத்து அங்கு சலைவைக்கல்லினால் ஆன ஒரு சாரதாம்பாள் சிலையையும் பிரதிஷ்டை செய்து சிறிதுகாலம் தங்கினார். இங்கேயே தன் எண்ணம் போல் ஜீவ சமாதியும் அடைந்தார்.
ஸ்ரீ சுப்பரமணிய அரபில சச்சிதானந்த சுவாமிகள்
Posted by
Karthikeyan rvk. and S.Mathavan
at
Thursday, November 18, 2010
Labels: Puduvai siththargal
0 comments:
Post a Comment